- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
பித்தப்பை உங்கள் செரிமான அமைப்பின் ஒரு பகுதியாகும். பித்தப்பைபையின் முக்கிய செயல்பாடு, கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் செரிமான திரவத்தை (கசப்பான பச்சை-பழுப்பு கார திரவம் - பித்தம் - செரிமானத்திற்கு உதவுகிறது ) கெட்டியாக்கி பித்தப்பையில் சேகரிக்கிறது. பித்தப்பை நீக்குவதன் மூலம் கொழுப்புகளை ஜீரணிக்க தேவையான செரிமான திரவத்தை கல்லீரலில் இருந்து தடுக்காது. மாறாக, பித்தப்பையில் சேமிக்க படுவதற்கு பதிலாக செரிமான திரவம் (பித்தம் - Biles) தொடர்ந்து உங்கள் செரிமான அமைப்பை (digestive system) சென்றடைகிறது.
உணவுக்கும் பித்தப்பைக் கற்கள்களுக்கும் சில தொடர்புகள் உள்ளது. உடல் பருமன் மற்றும் விரைவான எடை இழப்பு ஆகியவை பித்தப்பைக் கற்களை வளர்ப்பதற்கான ஆபத்து காரணிகள்.
பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்குப் ( Gallbladder stone removal surgery ) பிறகு உங்கள் செரிமான அமைப்பு, பித்தப்பை இல்லாமல் தொடர்ந்து செயல்படும். அறுவை சிகிச்சை தற்காலிகமாக உங்கள் உடல் இடையை குறைக்கலாம், ஆனால் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் நீண்ட காலத்திற்கு உடல் எடையை குறைக்க, அல்லது பராமரிக்க உதவுகிறது.
உங்கள் பித்தப்பை அகற்றப்பட்ட பிறகு, நீங்கள் உடல் எடை இழப்பை சந்திக்க நேரிடும். இது பின்வருவனவற்றின் காரணமாக இருக்கலாம்:
- கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்தல்
- சாதுவான உணவை உட்கொள்வது - சாதுவான உணவு என்பது பொதுவாக நார்ச்சத்து குறைவாகவும், காரம் குறைவாக உண்ணக்கூடிய உணவாகும்.
- குறைந்த உணவை தேர்ந்தெடுப்பது - அறுவைசிகிச்சைக்குப் பிறகு சில வாரங்களுக்கு, நீங்கள் குறைந்த உணவை அடிக்கடி சாப்பிட அறிவுறுத்தப்படுவீர்கள்.
- வயிற்றுப்போக்கு - பித்தப்பை அறுவை சிகிச்சையின் ஒரு சாத்தியமான பக்க விளைவுகள் வயிற்றுப்போக்கு ஆகும். இது சில வாரங்களுக்குப் பிறகு நின்றுவிடும்.
இதன் காரணமாக, நீங்கள் அறுவை சிகிச்சைக்கு முன்பு இருந்ததை விட குறைவான கலோரிகளை எடுத்துக் கொள்வதால் நீங்கள் தற்காலிகமாக, எடை இழக்க நேரிடும்.
உங்கள் பித்தப்பை அகற்றப்பட்ட போதிலும், சில வாழ்க்கை முறை மாற்றங்கள் செய்தும், உணவு முறைகளில் மாற்றங்கள் செய்தும், நீங்கள் நீண்ட காலத்திற்கு உங்கள் உடல் எடையை மெதுவாக குறைக்க முடியும். இதில், உணவியல் நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரை உங்களுக்கு உதவக்கூடும். எப்போதும்போல், குறுகிய கால மற்றும் விரைவான எடை இழப்பு முறைகள் ஆரோக்கியமானவை அல்ல, மேலும் அவை நீண்ட காலத்திற்க்கான வாழ்க்கைமுறையை மோசமாக்கும்.
மாறாக, எடை இழப்பை ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்ற முயற்சி செய்யுங்கள். அதாவது நல்ல உணவு தேர்வுகளை மேற்கொள்வது மற்றும் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது போன்றவைகளை எவ்வாறு பாதுகாப்பான முறையில் செய்ய முடியும் என்று உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
மேலும், பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு (Gallbladder stone removal surgery) பிந்தைய நிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் அபாயங்கள் குறித்து கேட்டு அறிய வேண்டியது அவசியம்.
Comments
Post a Comment